‘பூமி இழந்திடேல்’ - சென்னை புத்தகக் காட்சியில்...
’கனலி’ கலை இலக்கியச் சூழலியல் இணையதளத்தில் வெளியான ‘சூழலியல் - காலநிலைச் சிறப்பிதழ்’ அச்சுவடிவம் கண்டிருக்கிறது!
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம் கடந்த ஆண்டு வெளியிட்ட ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’, ‘பூமி இழந்திடேல்’ என்ற தலைப்பில் அச்சுவடிவம் கண்டிருக்கிறது.
‘பூமி இழந்திடேல்’ தொகுப்பு பிப்ரவரி 27 அன்று சென்னை புத்தகக் காட்சியில் வெளியானது. காக்கைக் கூடு பதிப்பக அரங்கில் (561, 562), எழுத்தாளர் நக்கீரன் அவர்கள் புத்தகத்தை வெளியிட கவிஞர் ஆதிரன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்; இதழாளர் ஆதி வள்ளியப்பன் இரண்டாம் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
‘பூமி இழந்திடேல்’
சூழலியல் - காலநிலைச் சிறப்பிதழ்
தொகுப்பாசிரியர்: சு.அருண் பிரசாத்
வெளியீடு: கனலி
பக்கங்கள்: 566
விலை: ரூ. 600
சென்னை புத்தக் கண்காட்சியில்
• தமிழ்வெளி (160)
• பரிசல் புத்தக நிலையம் (496, 497)
• பரிதி பதிப்பகம் (47, 48)
• உயிர் பதிப்பகம் (449)
• காக்கைக் கூடு (561, 562)
• பூவுலகின் நண்பர்கள் (289-290)
அரங்குகளில் ‘பூமி இழந்திடேல்’ தொகுப்பு கிடைக்கும்.
+91 90800 43026 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் ‘பூமி இழந்திடேல்’ தொகுப்பைப் பெறலாம்.
Commonfolks தளம் மூலமாகவும் ‘பூமி இழந்திடேல்’ தொகுப்பை வாங்கலாம்: https://www.commonfolks.in/books/d/bhoomi-izhandhidel-soozhaliyal-kaalanilai-sirappithazh