பாலசுப்ரமணியன் பொன்ராஜ், Blogs, Can't Get You Out of My Head
31-01-2021 — வாரயிறுதி வாசிப்பு [1]
இன்று மின்மடலின் புதிய பகுதி ‘வாரயிறுதி வாசிப்பு’. நேர்காணல்கள், கட்டுரைகள், பட்டியல்கள், திரைப்பட-ஆவணப்பட முன்னோட்டங்கள், Podcast இன்னும் இன்னும் என உங்கள் வாரயிறுதி வாசிப்பை, அறிதலைச் செம்மைப்படுத்தம் வாசிப்புப் பரிந்துரைகள் இந்த வாரத்தில் இருந்து தொடங்குகின்றன. உங்கள் மின்னஞ்சலை இங்குப் பதிவிடுவதன் மூலம், தடையின்றித் தொடர்ச்சியான இதை நீங்கள் உங்கள் மின்னஞ்சலில் பெறமுடியும். படியுங்கள், பகிருங்கள்!
நேர்காணல்: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
கனலி கலை இலக்கியச் சூழலியல் இணைய இதழின் 13ஆவது இதழ் வெளியாகியிருக்கிறது. ‘சமகால இலக்கிய முகங்கள்’ என்ற புதிய பகுதியில் எழுத்தாளர் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் கவனப்படுத்தப் பட்டிருக்கிறார். இதில் இடம்பெற்றிருக்கும் அவரது நேர்காணலை நண்பர் க. விக்னேஷ்வரனும் நானும் இணைந்து மேற்கொண்டிருக்கிறோம்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ் படைப்பிலக்கியத்தில் ஓர் இடையீட்டை நிகழ்த்தியிருக்கின்றன. ‘கனவு மிருகம்’, ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ என இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியிருக்கின்றன; அரசியல், சமூகம், பொருளாதாரம், நுகர்வு கலாச்சாரம் உள்ளிட்டவை சார்ந்து கட்டுரை, விமர்சனம் என அல்புனைவிலும் தொடர்ந்து பங்களித்துவருகிறார். உலகின் முதல் நவீன நாவல் என்று வழங்கப்படும், செர்வாண்டிஸின் ‘டான் கிஹோதே’ (Don Quixote) மீதான இவரது விமர்சன-ஆய்வுக்கட்டுரை (review-essay) சமகாலத் தமிழ் அல்புனைவுத் தளத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்வு (phenomenon).
ஒசூர் தொரப்பள்ளியில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கும் குன்றுகள் ஒன்றின் மரத்தடி நிழலிலும், மின்னஞ்சல்கள் வழியாகவும் இந்த உரையாடல் நிகழ்ந்தது. நேர்காணல் வடிவத்துக்காகத் தொகுக்கப்பட்ட உரையாடல் இங்கு:
“உலகில் இயங்கும் ஒருவரை, ஒருவரில் இயங்கும் உலகத்தோடு இணைப்பதே இலக்கியம்!”
பதிப்பகங்களின் blogs
உலகின் முன்னணிப் பதிப்பகங்கள், பல்கலைக்கழக அச்சகங்கள் தங்கள் வலைத்தளத்தின் ஒரு பகுதியாக blog-ஐப் பராமரிக்கின்றன. தாங்கள் வெளியிடும் புத்தகங்களின் பட்டியல், புத்தகங்களை அறிமுகப்படுத்தும் கட்டுரைகள், தாங்கள் வெளியிடும் எழுத்தார்களின் பேட்டிகள் என தகவல்செறிவான தளங்களாக அவை செயல்படுகின்றன. சர்வதேச, பல்கலைக்கழக அச்சகங்கள் & பதிப்பகங்களின் blogs கீழே:
BONUS: The Untranslated
The purpose of this blog is to bring to a wider attention significant literary works not yet translated into English. —Andrei [https://twitter.com/TheUntranslated]
Can't Get You Out of My Head - An Emotional History of the Modern World (2021)
இந்த முன்னோட்டம் குறித்து YouTube பக்கத்தில் உள்ள அறிமுகம் அப்படியே கீழே:
The highly anticipated new work from journalist and Bafta award-winning filmmaker, Adam Curtis will premiere exclusively on BBC iPlayer on 11 February 2021.
This new series of films tells the story of how we got to the strange days we are now experiencing. And why both those in power - and we - find it so difficult to move on.
The films trace different forces across the world that have led to now, not just in the West, but in China and Russia as well. It covers a wide range - including the strange roots of modern conspiracy theories, the history of China, opium and opiods, the history of Artificial Intelligence, melancholy over the loss of empire and, love and power. And explores whether modern culture, despite its radicalism, is really just part of the new system of power.
Adam Curtis says: “These strange days did not just happen. We - and those in power - created them together.”
Can't Get You Out Of My Head: An Emotional History of the Modern World is a BBC Film and BBC Three production for BBC iPlayer. Produced by Sandra Gorel, Executive Producer is Rose Garnett for BBC Film.
இன்று செய்திமடலின் இப்புதிய முன்னெடுப்பு பற்றிய உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்; இந்தப் புதிய முயற்சி குறித்து உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள்.
இன்று இன்ஸ்டகிராம் பக்கம்: https://www.instagram.com/arunprasath.substack/