ஆழி பதிப்பகத்தின் புதிய வெளியீடான ‘தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ நூலின் வெளியீடு, நேற்று (செப். 20) மாலை தியாகராய நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், ‘தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ நூலை வெளியிட்டு ஆற்றிய சிறப்புரையைச் செய்திகள் வழியாகவும் சமூக ஊடகங்களிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு. Aloor Sha Navas எம்.எல்.ஏ., மூத்த பத்திரிகையாளர் திரு. Ramki Jenraam K, அரசியல் செயற்பாட்டாளர் திருமிகு. Teesta Setalvad, மூத்த பத்திரிகையாளர்; FRONTLINE முன்னாள் ஆசிரியர் திரு. Vijayasankar Ramachandran ஆகியோர் முக்கியமான செய்திகளைக் கருத்துரையில் பகிர்ந்தனர்.
“தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்நூலுக்கான முன்மொழிவாக எமது பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களுக்கு நான் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய குறிப்பு இந்நூலுக்கான நோக்கத்தையும் அறிமுகத்தையும் வழங்கிவிடும்; அந்தக் குறிப்பை அப்படியே தருகிறேன்:
‘இனி நாம் செய்ய வேண்டுவது யாது?’
கருத்தரங்கம் / பேட்டி / புத்தகம்: ஒரு செயல் திட்டம்
தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும், அரசியல் தொடங்கி சுற்றுச்சூழல் வரை என எல்லா நிலைகளிலும் எதிர்காலம் நிச்சயம் நம்பிக்கைக்குரியதாக இருக்கப் போவதில்லை. காங்கிரஸ் [அதாவது இந்தியா கூட்டணி] ஆட்சியைப் பிடித்தாலும் அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து மாற்றத்தைத் தொடங்கி குறைந்தபட்ச சீரமைப்பை மேற்கொள்வதற்கு மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வந்தாக வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.
இந்தப் பின்னணியில், ‘இனி நாம் செய்ய வேண்டுவது யாது?’ என்கிற பொருளில் நம் முன் இருக்கும் பணிகள் பற்றியும் அவற்றை முன்னெடுக்க அரசியல், ஊடகம், நீதித்துறை உள்ளிட்ட துறைகள் எப்படித் தயாராக வேண்டும் என்பது குறித்தும் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கலாம் எனத் தோன்றுகிறது.
ஆழியும் பேரலையும் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை ஒருங்கிணைக்கலாம்;
துறைசார் வல்லுநர்களை பேரலைக்காகப் பேட்டி காணலாம்;
கருத்தரங்கப் பேச்சுகள், வாசிக்கப்படும் கட்டுரைகள், பேரலையில் வெளியாகும் பேட்டிகள் - இவற்றைத் தொகுத்து முதலில் தமிழிலும் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், இயன்றால் இந்தியிலும் அவற்றை மொழிபெயர்க்கலாம்.
மத்தியில் புதிய ஆட்சி அமைந்த 100ஆவது நாளை ஒட்டி ஆழி வெளியீடாக இத்தொகுப்பைக் கொண்டுவரலாம்.
எதிர்க்கருத்துகளை ஒடுக்குவதில் பாஜக புதிய எல்லையைத் தொட்டிருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இத்தகைய செயல்பாடுகளின் பின்விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இச்செயல்திட்டம் குறித்த உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கிறேன்.
- என்பதாக நான் அவருக்கு எழுதியிருந்தேன். அவருடைய பதில், இந்த நிகழ்வைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. அவருக்கு என் நன்றி!
ஆழி பதிப்பகமும் Peralai வலைக்காட்சியும் இணைந்து ஒருங்கிணைத்த இந்த நிகழ்வு, ஆழி-பேரலையின் சகோதரர்கள் அனைவரின் அயரா உழைப்பின் மூலம் ஒரு வரலாற்றுச் சம்பவமாக நடந்தேறியது.
அனைவருக்கும் அன்பும் நன்றியும் முத்தங்களும்!
‘தேர்தல் 2024: மீளும் ‘மக்கள்’ ஆட்சி’ நூலை வாங்கும் வழிகள்
நேரடியாக ஆழி புக்ஸ் தளத்தில் வாங்கலாம்: https://www.aazhibooks.com/product/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2024-%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
அல்லது
இணைப்பிலுள்ள QR Code மூலம் பணம் செலுத்திவிட்டு [நூலின் விலை ரூ. 200; அஞ்சல் செலவு ரூ. 50 - மொத்தம் ரூ. 250] ஆழியின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு +91 93456 38044 உங்கள் முகவரியைப் பகிர்ந்திடுங்கள்.
வாழ்த்துக்கள் அருண்... எஸ்டோனியாவில் இருந்து மணிவேல் ராஜன்...
வாழ்த்துகள்