வணக்கம்!

‘இன்று’ மின்மடலுக்கு உங்களை வரவேற்கிறேன்.

21ஆம் நூற்றாண்டின் உலக இயக்கம் என்பது மனிதனின் ஒட்டுமொத்த புரிதலுக்குச் சவாலாக விளங்கும் வகையில், அதிதீவிர சிக்கலான தன்மையை அடைந்திருக்கிறது; ஓர் எளிய உதாரணம், காலநிலை மாற்றம். இன்றைக்கு உலகளாவிய நிகழ்வு ஒன்றைப் புரிந்துகொள்ள, குறிப்பிட்ட அந்த ஒன்றை மட்டும் கவனிப்பது பலனளிக்காது; மாறாக, நம்பமுடியாத வகையில் அதன் இயக்கத்துக்குக் காரணிகளாக இருக்கும் பல்வேறு அம்சங்களின் அடிப்படைகள் பற்றிய புரிதலைக் கொண்டிருப்பதே, அந்த உலகளாவிய நிகழ்வு ஒருவர் வாழும் உள்ளூரில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய அறிவைப் பெறும் வழியாகும்!

இந்தப் பின்னணியில் நவீன உலக வரலாறு, சமகால வரலாறு, உள்ளூர்-தேச-சர்வதேச அரசியல், நவீன அரசு, அறிவியல்-தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் ஆகியவற்றைப் பற்றிய குறைந்தபட்ச புரிதலைக் கொண்டிருப்பது அவசியமாகிறது. மேலும் சமகால கலை-இலக்கியம் இவற்றின் போக்கை, மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை எப்படி பதிவு செய்கிறது, எதிர்கொள்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்றைய நவீன உலகை அறியும்-புரியும் முயற்சியாக ‘இன்று’ என்னும் இத்தளம் தொடங்கப்படுகிறது.

மேற்கண்ட தளங்களில் இன்றைக்கு நிகழும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், கண்டறிதல்கள் ‘இன்று’ தளத்தில் அறிமுகப்படுத்தப்படும்; கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள், நெடுங்கட்டுரைகள் ஆகியவை சீரான இடைவெளியில் வெளியாகும். தமிழில் அல்புனைவு எழுத்தில் புதிய முயற்சிகளையும், பரிசோதனைகளையும் மேற்கொள்ளவிருக்கும் ‘இன்று’ தளத்தில் இணைய உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவிடுங்கள்.

Share இன்று

User's avatar

Subscribe to இன்று

21ஆம் நூற்றாண்டின் எழுத்து; கலை, இலக்கியம் தொடங்கி காலநிலை மாற்றம் வரை!

People

Journalism & Publishing