புதிய நூல்: “பாலஸ்தீன்: போரும்... வாழ்வும்?”
அக்டோபர் ஏழும் அதன் பிறகு என்பது இந்நூலின் சாராம்சம்.
அக்டோபர் 7, 2023. அன்றைய தினம் என்ன செய்துகொண்டிருந்தேன் என்பதை இப்போது துல்லியமாக நினைவுகூர முடியவில்லை. ஆனால், அதன் பிறகான இந்த ஓராண்டில் என்ன செய்துகொண்டிருந்தேன் என பின்னாட்களில் கேட்டுக்கொள்ளும்போது அதற்கு என்னிடம் பதில் இருக்கவில்லை எனில் என்னை நானே மன்னிக்க மாட்டேன். ஒரு வகையில் என் இயலாமையின் வெளிப்பாடு இந்நூல்.
சர்வதேச செய்தி ஊடகம் ஒன்றின் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் செய்தியாளராக [international correspondent] கெய்ரோ, பெய்ரூத், ஜெருசலேம் போன்ற நகரங்களிலிருந்து செயலாற்ற வேண்டும் என்பது இதழியல் சார்ந்த என்னுடைய லட்சியமாகப் பள்ளிக் காலத்தில் இருந்தது; Anthony Shadidஇன் மரணம் என்னைப் பத்திரிகையாளன் ஆக்கியது. அவரது நினைவுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.
ஆழி பதிப்பக வெளியீடாக ஜனவரி 2025இல் நூல் வெளியாகும்.
அட்டை வடிவமைப்பு, ஸ்ரீநிவாச கோபாலன்.



வாழ்த்துக்கள்.
எதிர்பார்ப்புடன்.
வாழ்த்துகள் ,ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்