7 Comments
User's avatar
Iniyan's avatar

தமிழில் யாரும் உள்ளனரா என்ற கேள்விக்கு நீங்களே பதிலாவது மகிழ்வைத் தருகிறது.

தொடர்ந்து எழுதுங்கள். இதற்கான தேவை அதிகம்.

நீங்கள், தமிழில் மறைந்த என்.ராமதுரையின் 'பருவநிலை மாற்றம்' குறித்து விரிவாக எழுதலாமே? எனக்குத் தெரிந்து எளிமையான தமிழில் 'பருவநிலை மாற்றம்' குறித்து வெளிவந்துள்ள ஒரே புத்தகம் அது தான் என்று தோன்றுகிறது.

மேலும், நீங்கள் அறிந்திருக்கலாம். தகவலுக்காக சொல்கிறேன், தினமணியிலிருந்து ஓய்வு பெற்ற பொன்.தனசேகரன் 'வானிலை மாற்றங்கள்' பற்றி தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

மற்றபடி மகிழ்ச்சி. தொடர்க.

Expand full comment
Arun Prasath's avatar

இனியன்,

இதழாளர் ஆதி வள்ளியப்பன் எழுதி 2008இல் வெளியான ‘கொதிக்குதே... கொதிக்குதே’ நூல்தான் தமிழில் காலநிலை மாற்றம் சார்ந்து வெளியான முதல் நூல். அதன் பிறகு சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து என். ராமதுரையின் நூல் வெளியாகிறது. தியடோர் பாஸ்கரன் ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்; ‘கையிலிருக்கும் பூமி’ நூலில் அவை தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மிக அடிப்படையானவை; அதைப் பற்றிய அறிமுகத்தை வழங்குபவை. காலநிலை மாற்றத்தின் இன்றைய சொல்லாடல்களைப் புரிந்துகொள்ளும் வகையில் மிக விரிவான நூல்கள் அவசியம்.

பொன். தனசேகரனின் ‘நிகழ்காலம்: தமிழத்தில் பருவநிலை மாற்றம்’ நூலை வாசித்திருக்கிறேன். ‘வானிலை மாற்றங்கள்’ இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அச்சில் இருக்கிறதா, எங்கு வாங்க முடியும்?

--

வாசிப்புக்கும், தொடர் கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி, இனியன்!

Expand full comment
Iniyan's avatar

ஆதி வள்ளியப்பன் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நன்றி.

'தமிழத்தில் பருவநிலை மாற்றம்' ஐத் தான் குறிப்பிட்டேன். மகிழ்ச்சி.

இவை அடிப்படையானவை என்பது சரி தான்.

இயன்றால் தமிழில் நடந்த இம்மாதிரி முயற்சிகளை பற்றி எழுதுங்களேன்.

கூடுதலாக, பள்ளிக்கல்வியில் 'காலநிலை மாற்றம்' ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் நமக்கும் உள்ள நிலை குறித்து எழுதுவதைக்குறித்தும் யோசித்துப்பாருங்களேன்.

Expand full comment
Arun Prasath's avatar

‘சமகாலத்தில் காலநிலைப் போராட்டங்கள்: கிரெட்டா துன்பர்க்-ஐ முன்வைத்து’ என்பது அடுத்த கட்டுரையின் தலைப்பு. கிரெட்டா தன்னுடைய போராட்டத்தை ஆகஸ்ட் 20, 2018இல் தொடங்கினார். அதன் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி இக்கட்டுரையை வெளியிடவிருக்கிறேன்.

மேலும், இக்கட்டுரைகள் காலநிலை மாற்றம் குறித்த பெரிய எழுத்துத் திட்டம் ஒன்றின் தொடக்கம் தான். அதன் அனைத்து தளங்களைப் பற்றியும் விரிவாக பேசவிருக்கிறேன். அப்போது தமிழில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், செயல்பாடுகள் குறித்து எழுதுவேன். அவற்றில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் இடம்பெறும், இனியன்.

Expand full comment
Iniyan's avatar

மகிழ்ச்சியும் ஆவலும்.

Expand full comment
Barathraj R's avatar

"நவீனத் தமிழிலக்கியத்தின் ‘மாஸ்டர்’களாகவும் தமிழ்ப்

பண்பாட்டைத் தங்கள் படைப்புகளில் கடத்துபவர்களாகவும், மொழியின் முகங்களாகவும் தங்களை அறிவித்துக் கொண்ட

சில ‘முன்னணி’ எழுத்தாளர்கள்..."- இந்தக் குற்றச்சாட்டை வழிமொழிகிறேன். அதே நேரத்தில் எழுத்தாளர் நக்கீரன் போன்ற வெகு சிலர், தொடர்ந்து புனைவிலும் அல்புனைவிலும் சூழல் பற்றியும், சூழல் சீர்கேடுகள் பற்றியும், அது குறித்தான தீர்வு மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். அதைப் போன்ற படைப்புகள் பற்றி குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

Expand full comment
Arun Prasath's avatar

பரத்,

1) காலநிலை மாற்றம் போன்ற இன்றைக்கு சர்வதேச அளவில் முதன்மைப் பேசுபொருளாக மாறியுள்ள நிகழ்வுகள் குறித்து தமிழ் மக்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் விவாதங்கள் இங்கு இல்லை என்பதும், அப்பணியை முன்னின்று செய்ய வேண்டிய தமிழ் இலக்கிய-அறிவுப் புலம், அதன் முகமாக தங்களை எப்போதும் முன்னிருத்திக் கொள்பவர்கள் இப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காமல் (இதைப் பற்றிய புரிதலைக் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்வி) தனித்த உலகில் இயங்கிக் கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கம்.

2) நக்கீரன் போன்றவர்களின் பங்களிப்பும் செயல்பாடும் அளப்பரியது. ஆனால், தமிழிலக்கியத்தின் மையநீரோட்டத்தின் முகங்களாக அறியப்படுபவர்களின் வாசகப் பரப்பையும் வீச்சையும்விட நக்கீரன் உள்ளிட்ட சூழலியல் சார்ந்து இயங்குபவர்களின் எல்லை ஒப்பீட்டளவில் குறுகியது. என்றபோதிலும் அவை கணிசமான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தவிர, நக்கீரனும்கூட இதுவரை முழுமையாக காலநிலை மாற்றத்தை மையப்படுத்திய படைப்பை (எனக்குத் தெரிந்து) எழுதவில்லை. சூழலியல் சார்ந்த படைப்பிலக்கிய முயற்சிகள் ஏற்கெனவே இருக்கின்றன; நிறைய வரத் தொடங்கியிருக்கின்றன. என்னுடைய கேள்வி காலநிலை மாற்றத்தின் அறிவியல்-அரசியல்-விளைவுகள்-எதிர்காலம் உள்ளிட்ட தளங்களில் இயங்கும் படைப்புகள் தமிழில் எப்போது எழுதப்படும் என்பதே!

3) நக்கீரன் படைப்புகளைப் பற்றி விரிவான கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். :)

Expand full comment