‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உயிர் மூச்சு’ இணைப்பிதழில் காலநிலை மாற்றம் சார்ந்து நான் எழுதிவந்த ‘பூவுலகு இன்று’ தொடர் இந்த வாரத்துடன் (செப்டம்பர் 9) நிறைவடைந்திருக்கிறது. புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் தொடர்பியலில் பட்டமேற்படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது (2017-2019). வாசிப்பு சார்ந்த என்னுடைய ஈடுபாடு பல தளங்களில் விரிந்து பரவத் தொடங்கியிருந்தது. அதுவரை கேள்விப்பட்டு மட்டுமே இருந்த நூல்களைப் - அநேகமாக அனைத்தையும் - பல்கலைக்கழக நூலகத்தில் கண்டேன். அங்கிருந்த இரண்டு ஆண்டுகளில் என்னுடைய நேரத்தை அதிகபட்சமாக நூலகத்திலும் வாசிப்பறையிலும் செலவிட்டிருந்தேன். அதற்காகக் கணிசமான நூல்களை வாசித்து முடித்தேன் என்று பொருளல்ல (தமிழ்ப் பிரிவில் கிட்டத்தட்ட எல்லா நூல்களையும் ஒருமுறையேனும்
பூவுலகு இன்று: நிறைவுக் குறிப்பு